ஈரோடு அக்டோபர் 20 – 10 – 2023 அன்று சென்னிமலை அருகே பசுபட்டி பிரிவு காங்கயம் செல்லும் மெயின் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஈரோடு பெருந்துறையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சென்னிமலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சென்னிமலை டவுன் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன நெரிசலை தவிர்க்க சென்னிமலையில் இருந்து புறவழி சாலை அமைக்க நெடுந்சாலை துறையின் மூலமாக பசுபட்டி அருகே நில அளவிடு செய்யபட்டது. இதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னிமலை to காங்கயம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இதை அறிந்த பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்களின் கோரிக்கையை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இதனால் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா