ஈரோடு : ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு (5-2-2023) (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் தேர் நிலை சேரும் நாளான (6-2-2023) (திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்களும் 2 மணி நேரம் மட்டும் சென்னிமலை காவல்துறை மூலம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதி சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், பெருந்துறை டி.எஸ்.பி திரு.G.அண்ணாதுரை (Incharge) மேற்பார்வையில், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்
திரு.M.K.சரவணன், தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போலீசார் அனைத்து இடங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :