செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக அனைத்து வணிகர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதில் செங்கல்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர் 75 நபர்களுக்கு பொங்கல் நிவாரண உதவி செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியினை செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து வணிகர் அமைப்ப்பு சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு நகர அடகு ஜிவளரி சங்கம், செங்கல்பட்டு நகர மோபைல் சங்கம், செங்கல்பட்டு நகர இரண்டு சக்கர பழது பார்போர் சங்கம், செங்கல்பட்டு நகர மருந்து வணிகர் சங்கம், செங்கல்பட்டு நகர தையல் கலைஞர் சங்கம், செங்கல்பட்டு நகர நடப்போர் நல்வாழ்வு சங்கம், செங்கல்பட்டு நகர ஓட்டல் சங்கம், செங்கல்பட்டு நகர ரோட்டரி சங்கம், செங்கல்பட்டு நகர லயன்ஸ் சங்கம் மற்றும் அனைத்து வணிககள் அனைவரும் பங்கேற்றனர். சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர சிலம்பு கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் S.உத்திரகுமார் செயளாளர் AGD, பொருளாளர் ராஜாமுகமது துணைதலைவர், சையத் அப்தாகிர் மற்றும் நமது சங்கத்தின் துணை செயளாளர், பகுதிசெயளாளர், நிர்வாக ஆலோசகர் செயற்குழ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அன்பழகன்