சூளகிரி காவல் நிலைய பகுதியில் சண்முகம் என்பவர் 11.12.2021 ஆம் தேதி காலை ஓசூரை நோக்கில் லாரியை ஓட்டிக்கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி To ஓசூர் ரோட்டில் அழகுபாவி பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் டிராவல்ஸ் வாகனத்தின் ஓட்டுநர், கிளீனர் இருவரும் லாரியை வழிமறித்து டேய் ஆரன் அடித்தால் வழி விடமாட்டாயா என கெட்டவார்த்தையால் திட்டி அருகில் இருந்த கல்லை எடுத்து எனது லாரியின் சைடு கண்ணாடியையும் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து இனிமேல் ஆரன் அடித்தால் வழிவிட வேண்டும் இல்லையென்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டி சென்றதாக சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து எதிரிகள் இருவரை 12.12.2021 ஆம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூரில் இருந்து உங்கள் நிருபர்
ஆ. வசந்த் குமார்