கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மைலம்பட்டி தனம் நகர்ப்பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் உத்தரவின் பெயரில் காவலர்கள் பெரியசாமி மற்றும் தங்கமாரி ஊர்காவல் படையை சேர்ந்த நண்பர் ராஜ்குமார் திருட்டு நடந்த வீட்டை சோதனை செய்துவிட்டு அருகிலிருக்கும் நகருக்குச் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சில செய்திகளை கூறினர்.
யாரேனும் சந்தேகம் சந்தேகப்படும் வகையில் நடமாடினால் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் யாரேனும் வெளியூர் செல்ல வேண்டுமென்று இருந்தால் முன்கூட்டியே காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறிச் சென்றனர். அப்பகுதி மக்கள் காவல்துறையின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர்.

நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்