கோவை: பணம் வைத்து சீட்டு ஆடுவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அந்த கிளப்பில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் விஜயகுமார் 56. வேலுச்சாமி 44. ரமேஷ் 43. கார்த்திக் 26. மகேந்திரன் 63. ராஜகோபால் 43. நம்பியார் 36. ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 35 ஆயிரத்து 880 பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்