திருநெல்வேலி: பாளையங்கோட்டை தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கேடிசி.,நகர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
இதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து,விசாரணை நடத்தியதில் பாளையங்கோட்டை சாலையாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுந்தரம் 40, ஆறுமுகம் 44, டேனியல் ராஜ் 38, நாகூர் மீரான், கோட்டூரை சேர்ந்த செந்தில் 34, சேர்ந்த ராமமூர்த்தி 48 இவர்கள் 6 பேரும் பணம் வைத்து சூதாடியதை ஒப்பு கொண்டனர்.
உடனடியாக போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.