திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனையில் ஈடுபட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் (பணம் வைத்து சீட்டு விளையாட்டில்) ஈடுபட்ட 8 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, ரூபாய்.3,34,000/- பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டம், கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.















