தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கருத்தையா மற்றும் போலீசார் நேற்று 15.01.2023 ரோந்து பணியில் ஈடுபட்டபோது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தூதுகுழி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான கணபதி மகன் மந்திர மூர்த்தி (50), சுந்தர் மகன் பழனிக்குமார் 41, அங்கப்பன் மகன் கோட்டியப்பன் (50), முத்துச்சாமி மகன் முத்துப்பாண்டி (42), தாதன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களான சுப்பிரமணியன் மகன் சிவா (31), பார்வதி மகன் சங்கர் 34, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சொர்ணம் மகன் சேகர் (53) மற்றும் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மூக்கன் 43. ஆகிய 8 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கருத்தையா வழக்குபதிவு செய்து மேற்படி குற்றவாளிகள் 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 10,800/- பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தார்.
















