சென்னை: சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் பேரில், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 11.06.2021 அன்று இரவு கண்காணிப்பு பணியிலிருந்தபோது,
ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பழைய வண்ணாரப்பேட்டை, N.N.கார்டன், ஏழாவது சந்து எண்.15/4 என்ற வீட்டை கண்காணித்த போது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.ராமு, (25), நித்தியானந்தம் (20) விக்னேஷ் (32), பாலாஜி (25), கார்த்திக், தினேஷ்குமார், (20) வெங்கடேசன் (21), சக்தி (28) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.3,500/-, மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்