தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (19.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவன்மடம் பகுதியில் உள்ள பிராய்லர் கோழி கடையில் வைத்து தூத்துக்குடி மாதவன் க்ஷநகரை சேர்ந்த அந்தோணி மகன் ரவி (58) சாயர்புரம் நடுவக்குறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் நாகராஜ் (30) தூத்துக்குடி மடத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த பால் மகன் வெள்ளத்துரை (41) தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த சகாயராஜ் மகன் பிரசாத் (38) கீழ தட்டாப்பாறையைச் சேர்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (36) மற்றும் சாயர்புரம் மீன் கடை தெருவை சேர்ந்த ஞானதாஸ் மகன் சாலமன் தாமஸ் (55) ஆகிய 6 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 40,975/- ரொக்கப்பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.