சென்னை: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய
ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 03.06.2021 அன்று மாலை விருகம்பாக்கம், யாதவால் தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரின் உள்புறம் சென்று கண்காணித்தபோது, அங்கு சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.புனிதன், வ/33, சாலிகிராமம், 2.முகமது ஆசீப், வ/32,
சாலிகிராமம், 3.கிருஷ்ணன், வ/36, விருகம்பாக்கம், 4.அசாருதீன், வ/32, வளசரவாக்கம், 5.மணிகண்டன், வ/40, விருகம்பாக்கம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் ரூ.2200/- மற்றும் 1 சீட்டுக்கட்டு கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.