கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமமூர்த்தி நகர் தர்கா அருகில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும், சூதாடி கொண்டிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். சூதாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த சீட்டுக் கட்டுகள் மற்றும் ஐந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.