திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி காவல் உட்கோட்டம், தா.பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர் என்ற தனிப்படை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர்களை ஐவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதும், மேற்கொண்டு அவர்களின் கைபேசி சோதனை செய்த பொழுது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்களிடம், சூதாட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
இதில் 15,790 ரூபாய் ரொக்க பணமும், 05 செல்போன்களும்(3 Android ,2 keypad Phone) 2 two wheeler, பறிமுதல் செய்யப்பட்டு, 05 நபர்களை கொண்டு சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலுடன் மேற்கண்ட வழக்கு சொத்துக்களை தா.பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, தா.பேட்டை காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்