தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மணப்படையூர் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் கடந்த மாதம் ஒரு மர்ம நபர் ஜோசியம் பார்ப்பதாக கூறிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து அந்த வீட்டில் இருந்த நபர்களை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அந்த மர்ம நபரை இனம் கண்டு கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி , கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், திரு . கீர்த்திவாசன் டிபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன் தலைமையில் திரு .சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், திரு. தலைமைக் காவலர் பாலசுப்ரமணியம் மற்றும் காவலர்கள் நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பற்றி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் , தனிப்படை போலீசார் (12-8-2023 )இன்று சுவாமிமலை புறப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அந்நபர் மேற்படி குற்றத்தில் ஈடுபட்டவர் என்பதும் , இவர் ஓசூர் அருகிலுள்ள கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த மாதையன் மகன் சக்திவேல் (23) என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து 5 கிராம் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்கள் . மேற்படி சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து இன்று(12-8-2023) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளியை கும்பகோணம் கிளை சிறையில் போலீசார் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்