ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள, தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சமத்துவ மற்றும் சுகா-தார பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். மயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், பம்பை உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன், தமிழ்-நாடு ஓட்டல் மேலாளர் அலெக்சாண்டர், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்