திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தூய்மையாகவும் சுற்றுப்புறங்களை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்,என திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அறிவுரை கூறினார்.
திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன், பொறுப்பேற்றவுடன் அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறது, என்பதை ஆய்வு செய்தார். கைதிகளை இரவில் தங்க வைக்க கூடாது என அறிவுறுத்தினார் .பின்பு அனைத்து அறைகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளிப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் கனிவாகப் பேசவேண்டும் என அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா