மதுரை : நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு சுருங்கியதால், மழை பொழிவும் குறைந்து போனது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீரின் தேவை கேள்விக்குறியானது. இதனால், தமிழகத்தின் உற்பத்தி செய்யப்படும் நெல் சாகுபடியும் குறைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில் காவல் துறையினர் களம் இறங்கி உள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவுப்படி, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நேற்று நட்டுவைக்கப்பட்டது. இதன்மூலம் காவல்நிலையங்களும் அழகுபெறும் மற்றும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா















