தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திருமாரி அவர்கள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பாலக்கோடு பென்னாகரம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த இரண்டு பேரில் ஒருவர் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார் மற்றொருவரை மடக்கி பிடித்த போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 157 கிலோ குட்கா மற்றும் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது மேலும் பிடிபட்டவர்களை விசாரித்ததில் பென்னாகரம், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அருள் 26. என்பதும் மற்றொருவர் பென்னாகரம் கிட்டம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்து 25. என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்து அவரிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர் மேலும் தப்பி ஓடிய முத்துவை தேடி வருகின்றனர்.