சேலம் : சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக ஊரக உட்கோட்டம் பனமரத்துப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமகுட்டப்பட்டி மலை கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவினர் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்மு முகாமில் திரு. சண்முகம், காவல் துணை கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திருமதி.கலையரசி, காவல் ஆய்வாளர் மல்லூர் வட்டம், காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிக்குமார், திரு.பாபு, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் அனைவரையும் தும்மல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.மணிகண்டன், வரவேற்றார். முகாமில் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது இந்த பகுதியில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவது பற்றியும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் நல்ல முறையில் படிக்க வைத்து கிராமம் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றும் எந்த பிரச்சனை என்றாலும் காவல் நிலையம் வந்து தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் உரையாற்றினார் கூட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்