திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தில் பொது கழிப்பிடமும்,கோட்டைக்குப்பம் கிராமம், டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் பழவேற்காடு ஊராட்சி குளத்து மேடு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தானியங்கி முறையில் இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஆக மொத்தம் 3 மையங்கள் அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் நகரில் உயர் கோபுர மின்விளக்கும் அமைக்கப்பட்டது. காட்டுப்பள்ளி, லைட் ஹவுஸ், காட்டூர் மற்றும் வாயலூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களை சார்ந்த தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுற்றுப்புறத்தின் தூய்மையை பாதுகாக்க ஏதுவாக துப்புரவு பணிக்கு உதவும் வகையில் தலா ஒன்று வீதம் மொத்தம் நான்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டது. இதே போன்று ஏற்கனவே குப்பை அகற்ற துப்புரவு பணிக்காக 7 ஊராட்சிகளுக்கு டாக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 12190 விவசாய மற்றும் மீனவ குடும்பங்கள் நேரடியாக பயனடைவார்கள்.
இந்த திட்ட பணிகளை அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுக தலைமை அலுவலர் செழியன் ஆபிரகாம் திறந்து வைத்து துவக்கி வைத்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,குணசேகரன், ஊராட்சி செயலர்கள் கோட்டைக் குப்பம் குமார், லைட் ஹவுஸ் சௌந்தர்ராஜன், காட்டுப்பள்ளி மகேந்திரன், காட்டூர் ஜெயமாலா, வாயலூர் சரஸ்வதி ஆகியோர் இதனைப் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அப்பகுதி கிராம நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய அதானி அறக்கட்டளை மக்கள் தொடர்பு அலுவலர் ஜேசுராஜ் உள்ளிட்ட அதானி திட்ட பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு