வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவை போற்றும் வகையில் கோட்டை அருகே மக்கள் சந்திப்பில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் வேலூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் ஆகியோர் இன்று 215 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பார்த்திபன் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் திரு .கமாண்டர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.