மதுரை : மதுரை சிந்தாமணி டோல் கேட்டில் சுங்கக் கட்டணம் செதுத்தாமல் தகராறு செய்த 2 வக்கீல்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை சிந்தாமணி ரிங் ரோடு சுங்கச்சாவடி காரில் வந்த 7 பேர் சாவடி கட்டணத்தை கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் கடந்த வாகனங்களையும் கட்டணம் செலுத்தாமல் செல்லுமாறு கூறினர்.
மேலும் அந்த வழியாக வாகனங்கள் வெளியேறும் இடத்தில் காரை குறுக்காக நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், காவல் உதவி ஆய்வாளர் திரு.அதிகுந்த கண்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, காரில் வந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மற்றும் இரண்டு வக்கீல்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.நாராயண மூர்த்தி