சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு,IPS காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.ரவி ஐபிஎஸ் , தடய அறிவியல் துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.