தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் டவுன் இராமசாமி கோவில் அருகே கடந்த (17.07.23), அன்று இரவு தனியாக சைக்கிளில் சென்ற நபரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் இக்குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை விரைவில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ் ராவத் ஐ.பி.எஸ், அவர்கள் உத்தரவிட்டார். தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் டி.பி.எஸ், அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு .செல்வகுமார், தலைமை காவலர்கள் திரு. பாலசுப்பிரமணியம், நாடிமுத்து , செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் CCTV கேமரா , செல்போன் தடம் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மொளச்சூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் டில்லிதுரை (23),என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நேற்று (20-7-2023) கும்பகோணம் புறநகர் பகுதியில் சுற்றி திரிந்த அந்நபரை பிடித்து அவரிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட ரூ.14,000/- மதிப்புடைய செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் (பல்சர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு டில்லி துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது .மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட (இவரின் நண்பர் ) மற்றொரு குற்றவாளியான மாடாகுடி மில் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் பிரவீன் என்பதும் தெரிய வந்தது , இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்