திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கொசுத்தலை ஆற்றில் ஒரு தடுப்பணை உள்ளது. இங்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகமானது. இதனால் சென்னைக்கு அருகாமையில் உள்ள இந்த ஆற்றில் குளிப்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகப்படியான ஆட்கள் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை முகப்பேருவை சேர்ந்த இசுசூ என்ற கார் தொழிற்சாலையில் பைனான்ஸ் மேனேஜர் ராஜாராம் என்பவர் வயது (40) மனைவியின் பெயர் உஷா இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ராஜாராம் தன் நண்பர்கள் முன்று பெயருடன் சேர்ந்து குளிப்பதற்காக இங்கு வந்துள்ளார். சுமார் ஐந்து மணி அளவில் நான்கு பேரும் குளித்துக் கொண்டு இருந்த நிலையில் ராஜாராம் மட்டும் சற்று தூரம் சென்று குளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் கைகளை உயர்த்தி காட்டியது போல் தெரிகிறது இதை பார்த்த மற்ற மூன்று நண்பர்களும் அவரை காப்பாற்றுவதற்காக சென்று உள்ளனர் ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத நண்பர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் தீயணைப்பு துறையின் உதவியோடு வெகு நேரமாக தேடி நேற்று ராஜாராமின் உடல் கிடைக்கவில்லை. அதன் பின் காலையில் தேடலாம் என்று நினைத்து திரும்பி உள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் தீயணைப்புத் துறை வராத காரணத்தால் ஊர் மக்கள் ராஜாராமின் உறவினர் இடத்தில் நாங்கள் தேடி கண்டுபிடித்து தருகிறோம் என்று கூறி. சுமார் பத்து பேர் கொண்ட கும்பல் தண்ணீரில் குதித்து 10 நிமிடங்களில் ராஜாராமின் உடலை கரைக்கு கொண்டு வந்தது. உடலைப் பார்த்து ராஜாராமின் உறவினர்கள் கதரி அழுத்தனர். மேலும் ராஜாராம் எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் அடிமை இல்லாதவர். அவர் தற்காப்பு கலைகளை நன்கு அறிந்தவர் குறிப்பாக கராத்தே மற்றும் நீச்சல் மற்றும் சிலம்பம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். யோகாசனம் செய்வதிலும் வல்லவர் என்று அவரின் சக நண்பர்கள் கூறுகின்றனர். அவரின் இறப்பு எங்களால் நம்ப முடியவில்லை என்று நண்பர்கள் அழுது புலம்புகின்றனர். இந்த நிலையில் மீஞ்சூர் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு