சென்னை : சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் சரகத்தில், மங்களா நகர் குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.சி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றமைக்கான நிகழ்ச்சியில் சென்னை பெருநகர SRMC காவல் உதவி ஆணையாளர் திரு.பழனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை SRMC மங்களா நகர் பகுதி முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், SRMC முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் உதவி ஆணையாளர் திரு.பழனி, அவர்கள் கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், குடியிருப்புவாசிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை SRMC பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
எஸ்.ஆர்.எம்.சி காவல் சரக பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்தும் பணி நிறைவுபெற்றமைக்காக, நேற்று (19.09.2021) குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சென்னை பெருநகர SRMC காவல் உதவி ஆணையாளர் திரு.பழனி அவர்கள் கலந்து கொண்டார்.
போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒத்துழைத்த குடியிருப்புவாசிகளுக்கு காவல் உதவி ஆணையாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் SRMC காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மற்றுமு; காவல் ஆளிநர்கள், அப்பகுதி குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா