திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள்,குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சி.சி.டிவி கேமராக்கள் அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று வள்ளியூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் வள்ளியூர் பகுதியில் உள்ள வங்கிகள், பேருந்து நிலையங்கள், ஆட்டோ ஸ்டாண்ட், கடைகள் ஆகிய இடங்களுக்கு சென்று பொது மக்களுக்கு சி.சி.டிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்.
பெண்கள் நகைகள் அணிந்து கொண்டு செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாடகைக்கு தங்கும் நபர்களின் முழு பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் புகைப்படம் உள்ள அடையாள அட்டை ஆதார் கார்டு நகல்களை வீட்டின் உரிமையாளர்கள் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி விழிப்புணர்வு அடங்கிய பிரசுரங்களை கடைகளில் ஒட்டியும் பொதுமக்களிடம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.