சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர்,
தேவகோட்டை மற்றும் மானாமதுரை ஆகிய காவல் துணைக்கண்காணிப்பாளர்
அலுவலகங்களில் (08.04.2023) ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்
பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த
முகாமில் சம்பந்தப்பட்ட உட்கோட்டங்களில் தொடர்புடைய பொதுமக்கள் நேரில்
கலந்து கொண்டு தங்களது புகார்களுக்கு தீர்வு காணலாம் என சிவகங்கை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி