சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்.989/2022, u/s.4(1)(A) TNP Act & 420,468,471 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு போலி மதுபானங்கள் தயாரித்தவர்கள், அதற்கு தேவையான பாட்டில்கள் மற்றும் அதற்குரிய லேபில்கள் தயார் செய்து கொடுத்த நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கின் போலி மதுபானங்கள் தயாரிப்பதற்குரிய லேபில்கள் அச்சடித்து மிகப்பெரிய அளவில் சப்ளை செய்து வந்த நரி நரேந்திரபாபு (42), த/பெ.ஜெயராம், பழைய எண்.31, புதிய எண்.2, ராமையா தெரு, வண்ணாரப்பேட்டை விவேக் நகர், பெங்களூரைச் சேர்ந்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 49 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.திரு.செந்தில்குமார் அவர்கள் கூறுகையில், இது போன்ற கொலை, கொள்ளை, பாலியல் தொடர்பான குற்றங்கள், போலி மதுபானங்கள் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடும் நபர்கள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் விடுத்துள்ளார். என எச்சரிக்கை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி