தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார். இ.கா.ப. அவர்களின் உத்தரவுபடியும், காவல் கண்காணிப்பாளர் சைபர்கிரைம் பிரிவு திருமதி.தேவராணி இ.கா.ப, அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ். அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மற்றும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமசிவாயம் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் திருமதி.தேவி மற்றும் திரு.சதீஷ்குமார், சார்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பழனியப்பா கூட்டரங்கில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்சம் 10 மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, அந்தக் குழுவின் தலைவர்களாக செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட அளவில் சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலர்களுடன் whatsapp குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதில் பகிரப்படும் சைபர் கிரைம் விழிப்புணர்வு சார்ந்த செய்திகள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக சென்றடைந்து சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படும். மேலும் சைபர் கிரைம் Help Line No.1930 , மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி