சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என சுகா தாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொது மக்கள் விழிப்புணர்வின்றி கூட்டம் கூடுதல், முக கவசம் அணியாமலும் சுற்றி வருகின்றனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சைபர் கிரைம் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்