சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா.சிவ பிரசாத் , இ.கா.ப., அவர்கள், நேற்று (14.01.2026) சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் சமத்துவ பொங்கல் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில ஆண் மற்றும் பெண் காவலர்கலுக்கான விளையாட்டு போட்டிகள், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளான இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி
















