சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் சுந்தர நடப்பு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற விமல்ராஜ் என்பவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் விசாரணை நடத்தி, கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி சிவகங்கை கோட்டாட்சியர் நீதி மன்றத்தில் மேற்படி நபர் மீது பிரிவின் 110 Crpc – ன் கீழ் வழக்கு பதிவு செய்து ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரணை செய்த கோட்டாட்சியர் திருமதி.செல்வகுமாரி அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட விமலை ஒரு வருடம் எந்தவித தகராறில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவித்தார். மேற்படி நபர் மீண்டும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அவர்கள் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில விமல் நிபந்தனையை மீறி தகராறில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை கோட்டாட்சியர் திருமதி. செல்வகுமாரி அவர்கள் விமல்(எ) விமல்ராஜ்க்கு 5 மாதம் 16 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்