சிவகங்கை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 3505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,4078 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 2183 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்