சிவகங்கை : சிவகங்கை திருப்பாச்சேத்தி காவல் நிலையம் குற்ற எண். 01/2020 u/s 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான சுள்ளான் கருப்பையா (28/19) என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமநாதன் அவர்கள் 16.01.2020-ம் தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்