சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வெங்கட்டியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரின் மனைவியை அதே ஊரைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட முத்துச்சாமி என்பவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இத்தகராறில் ஆத்திரமடைந்த காசிராஜன் முத்துசாமியை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்து, மரக்கட்டையால் தாக்கியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்துசாமியின் அக்கா 28.06.2020 அன்று அளித்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் காசிராஜன் மீது u/s.342, 302, 506(ii) IPC – ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெற்கு போலீசார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பெரிய உஞ்சனையைச் சேர்ந்த நிவாஸ் என்பவர் அரியக்குடி அருகே நிறுத்தி சென்ற இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து 26.06.2020 அன்று நிவாஸ் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை செய்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அலக்ஸ் மீது u/s.379 IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து 27.06.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை