சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட 15 (நான்கு சக்கர வாகனங்கள் -02 இரு சக்கர வாகனங்கள்-13) காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.எஸ், செல்வராஜ் அவர்களால், உத்தரவிடப்பட்டுள்ளது. பொது ஏலமானது வருகின்ற (15.06.2023), அன்று காலை 10.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்துக்கு உண்டான காவலர்கள் வாகனங்கள் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (14.06.2023) அன்று காலை 08.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக
வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் (15.06.2023) அன்று காலை 06.00 மணி முதல ; 10.00 வரை ரூ.1000- முன் வைப்பு
தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர காவலர் வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் புளுவு விற்பனை வரியுடன் சேர்த்து
(15.06.2023) அன்று உடனே செலுத்தி விட வேண்டும் என்பதன் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி