சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ஆனந்த் அவர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் பேரில் 22.07.2020ம் தேதி திருப்பாச்சேத்தி காவல் நிலைய காவல் ஆளிநர்களுக்கு துணை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ், காவல் நிலைய ஆய்வாளர் திரு. சேரன் அவர்கள் உதவியுடன் மருத்துவக்குழுவினர் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை