சிவகங்கை : முன்னதாக காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்கள். அதன் பின்னர் காவலர்களின் உடை பொருட்களை பார்வையிட்டு அவர்களின் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன், ஆயுதப்படை காவலர்களுக்கு காவல் பணியாற்றும் போது காவலர்களுக்கான பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி உணர்ந்து செயலாற்ற வேண்டிய விதம் குறித்து அறிவுரை வழங்கினார்கள். மேலும் ஆயுதப்படைப் பிரிவின் பதிவேடுகள், கோப்புகள், ஆயுதங்கள் வைப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், சட்டவிரோத கூட்டத்தை தண்ணீர் பீச்சி கலைக்கும் வருண், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா, பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் பயன்படுத்தும் நடமாடும் கழிப்பறை வாகனம் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொள்ள வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? எனவும் மேலும் 10 வருடங்கள் பயன்பாட்டை நிறைவு செய்த வாகனங்களை கழிவு செய்யவும், உத்தரவிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நாகராஜன் அவர்கள் செய்து இருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி