சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழகுளம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தினுள் அடையாளம் தெரியாத பொருள் வெடித்ததில் அதே ஊரை சேர்ந்த சிறுவர்களான நவீன் குமார், கிஷோர் குமார், நவீன் ஆகியோர் காயம் அடைந்தனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் வெடிபொருள் கண்டறிதல் குழு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை முடுக்கி விட்டனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் வெடிபொருள் ஆனது, பைரோ டெக்னிக் மட்டுமே உள்ள சாதாரண பட்டாசு வகையை சேர்ந்த வெடிபொருள் என தெரியவந்தது. மேலும் கீழ்குளம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, கலர் காகிதத்தில் ஆனால் வெங்காய வெடி போன்ற டப்பாவில் வைக்கப்பட்டு எரிந்ததில் வெடித்திருக்கலாம் என தெரியவருகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்