சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி அலோபதி சிகிச்சை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி, மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் குழுவினருடன் சோதனை செய்தபோது போலி சிகிச்சை அளித்த சந்திரனை பிடித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சந்திரனை u/s 420 IPC and 15(1) Indian medical council act-ன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.