சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த மருதன் என்பவர் தன் முதலாளி மாயழகு என்பவரின் நிலத்தில் நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்திற்கு எதிர்பாராமல் நீர் பாய்ந்ததை கண்ட ரமேஷ் ஜாதியை பற்றி தகாத வார்த்தைகளால் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மருதன் 04.11.2019 அன்று அளித்த புகாரின்பேரில் பழையனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொலை மிரட்டல் விடுத்த ரமேஷ் என்பவரை 11.11.2019 அன்று u/s 294 (b), 323, 506 (ll) IPC &(1) (c) (s) SC/ ST POA Act- ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.