சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கௌரி பட்டியை சேர்ந்த கண்ணப்பன்(88) என்பவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ATM -ல் பணத்தை எடுத்து கைப் பையில் வைத்தபடி டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் பணப்பையை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கண்ணப்பன் 11.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக போலீசார் CCTV கேமராவை சோதனை செய்து பார்த்த போது பரமக்குடி எமனேஸ்வரத்தை சேர்ந்த பழனிச்சாமி(68) என்பவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே போலீசார் u/s 392, 397 IPC-ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.