சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட C.K மங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி தம்பதியர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அழகர்சாமியின் மைத்துனன் முருகேசன் கேட்டதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் தகாத வார்த்தைகளால் தாக்கி அழகர்சாமியை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அழகர்சாமி 11.11.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் முருகேசன் மீது u/s 294(b), 341, 506(ll)IPC-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.