சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திடவும், அறிவார்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிடவும், குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் தேதியினை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினமாக அனுசரித்திடவும், அது குறித்து உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 12.06.2022 அன்று அரசுவிடுமுறை என்பதால் அனைத்து அரசு அலுவலர்களும் இன்றையதினம் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” எனவும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி