சென்னை: சென்னை மணலி பல்ஜிபாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5 மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பயோ கேஸ் கண்ட்ரோல் படுத்தும் பேனல் போர்டு அறையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் மெஷின் ஆபரேட்டர்களாக பணியாற்றிய நிலையில், இருவரும் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது மெஷின்களை ஷட் டவுன் செய்வதற்காக பணியில் ஈடுபட்ட போது, மெஷின் வெடித்து அருகில் இருந்த கேஸ் பிடித்ததில் அலுவலகத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் பாஸ்கரன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த மணலி காவல் துறையினர் மற்றும் மணலி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சரவண குமார் உயிரிழந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி கூராய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கேஸ் வெடித்து சிதறியதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தொழிற்சாலையில் முன்பு கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் திருவொற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு செய்தார். இதனிடையே பயோ கேஸ் தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு