கோவை : கோவை மாவட்டம் இருகூர் பக்கம் உள்ள ராவுத்தூரை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45 ஆடு வெட்டும் தொழிலாளி இவரது மனைவி அமுதா (வயது 35) இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர் தாமோதரன் குடிப்பழக்கம் உடையவர் இதை இவரது மனைவி கண்டித்தார் இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாமோதரன் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா அங்கிருந்து கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார் இதையடுத்து தாமோதரன் தன் மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்தார் அவருடன் தகராறு செய்தார் இந்த நிலையில் இன்று காலையில் மனைவியை வீட்டுக்கு வருமாறு போனில் அழைத்தார்.
வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் இதனால் அமுதா தன் குழந்தைகளை விட்டு விட்டு தான் மட்டும் வந்தார். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது கணவர் வீட்டிலிருந்து சிலிண்டர் கேஸை திறந்து விட்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறினார் அப்போது சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியே வந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா தனது கணவரை பிடித்து வெளியே இழுத்து வந்தார்
அப்போது திடீரென்று காஸ் சிலிண்டர் வெடித்து விட்டது இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது வீடு இடிந்து விழுவதற்குள் 2 பேரும் வெளிவந்து விட்டதால் காயம் இல்லாமல் உயிர் தப்பினார்கள் இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் எரிந்து சேதம் ஆனது சிலிண்டர் வெடித்த சத்தம் அந்த பகுதியில் குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டது இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் குடிபோதையில் தாமோதரன் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி சிலிண்டரை திறந்து விட்டது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் சிலிண்டரை திறந்து விட்டு வீடு தரைமட்டமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்