சிவகங்கை: மாநில அளவிலான வூசு சப் ஜூனியர் போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன் ஷா சிலம்பப்பள்ளி மாணவி வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை தமிழ்நாடு வூசு சங்கத்தின் சார்பாக வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் 22 ஆவது மாநில அளவிலான வூசு சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்ட திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியின் மாணவி ப்ரீத்தி 12 வயதுக்கு உட்பட்டோருக்கான 30 கிலோ எடைப் பிரிவிலான சாண்டா (சண்டை) போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். குறுகிய காலப் பயிற்சியில் மாநில அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற அவரை, திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியின் ஆசான் நமசிவாயம், பயிற்சியாளர்கள் சொர்ணலதா நமச்சிவாயம், சுந்தரமூர்த்தி, சுந்தர மணி, சிவகங்கை மாவட்ட வூசு சங்கத்தின் செயலாளர் ராஜா மற்றும் பயிற்சியாளர் லதா ராஜா ஆகியோரும் மற்றும் பெற்றோர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி