திருப்பத்தூர்: சிறைத்துறை தலைவர் டிஜீபி சுனில் குமார் சிங் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் சையத் அமிர் தலைமையில் பொதுமக்களுக்கான கோரானா விழிப்புணர்வு பேரணி திருப்பத்தூர் கிளைச் சிறையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகம், காய்கறி மார்க்கெட், சேக்கரட் காலேஜ் வரையிலான இரு சக்கரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பொதுமக்களுக்கு முக கவசம் சனிடைசர், கையுறைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன் களப்பணியாளர்கள் வெற்றிவேல், கணேசன்,சரவணன், வருண் குமார், ராகவேந்திரன், யோகேஸ்வரன், ஆகிய சிறைத் துறை காவலர்களும் கலந்து கொண்டனர்.